கனடாவில் உள்ள இந்திய வம்சாவளி பெண் ஒருவர், Amazon Canada-வுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட காணொளியால் இணையத்தில் சில எதிர்மறையான கருத்துக்களை எதிர்கொண்டார்.
உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் செலினா கோஸ்லா (Selena Khosla), கனடாவுக்குச் சென்ற பிறகு, Amazon-ல் ஆர்டர் செய்யப்பட்ட ஒரு பொருளை திருப்பி அனுப்ப (Return) நினைத்தார்.
ஆனால், இந்தியா போலல்லாமல், கனடாவில் அமேசானில் வாங்கிய பொருளை Return அனுப்ப, வாடிக்கையாளரே தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதில் தான் ’கலாச்சார அதிர்ச்சியை’ (cultural shock) அனுபவித்ததாகக் கூறினார்.
இங்கு “அமேசான் வாலே பையா (Amazon delivery agent) உங்கள் வீட்டிற்கு பேக்கேஜை திரும்பப் பெற வரமாட்டார், நீங்கள் பேக்கெட் செய்ய வேண்டும், லேபிளை அச்சிட வேண்டும்… அந்த சிரமத்தை எல்லாம் செய்துவிட்டு, அதை தபால் அலுவலகத்திற்குச் சென்று அனுப்பவேண்டும்” என்று அவர் கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ஒரு காணொளியில் கூறினார்.
வைரலான இந்த காணொளி நான்கு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 4,000-க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது. அந்த காணொளியைப் பார்த்த ஏராளமானோர் அவரை விமர்சித்துள்ளனர்.
“அவள், இந்தியாவில் செய்வது போல் ஏன் இங்கு மேற்குலகில் தொழிலாளர்களைச் சுரண்ட கூடாது?” என்று கேட்பதுபோல் இருப்பதாக ஒருவர் கருத்தை பதிவிட்டுள்ளார்.
“ஆமாம், ஆனால் இங்கு வாழ்வாதாரம் இல்லாமல் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய ஆட்கள் உள்ளனர், அதனால் தான்” என்று மற்றொரு எக்ஸ் பயனர் கூறினார்.
“அவள் எந்த சிரமத்தை அனுபவித்தாலும், என்றைக்கும் அவள் கனடாவில் தான் வாழப்போகிறாள்…” என்று மற்றொருவர் கூறினார்.
டாக்டர் செலீன் கோஸ்லா இதுபோன்ற எதிர்மறையான கருத்துகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் இந்தியாவில் வாழ்வதன் “நன்மைகளை” முன்னிலைப்படுத்த மட்டுமே தனது அனுபவத்தை பகிரந்ததாகக் கூறினார்.
“நான் ஒரு NRI ஆக இருக்கலாம், ஆனால் தீமைகளைக் காட்டிலும் நன்மைகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம் எனது பங்கைச் செய்கிறேன்.” என்று அவர் மேலும் கூறினார்.
அவருக்கு Instagram-இல் 1.21 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர் மற்றும் BlueTick கொண்ட கணக்கையும் கொண்டுள்ளனர்.