Truecaller செயலியில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சத்தின் மூலம், AI உதவியுடன் உங்கள் சொந்த குரலில் அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியும்.
ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு நுழைந்து வருகிறது.
இதன்மூலம் வரும் அழைப்புகளுக்கு சொந்த குரலில் பதில் அளிக்க முடியும். இந்த அம்சமானது Microsoft தொழில்நுட்பத்துடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பயனர்கள் தங்களது விருப்பத்தின் படி, தயார் செய்த பதில்களை அழைப்புகளுக்கு கொடுக்கலாம். அதாவது, நீங்கள் செல்போனை எடுக்க முடியாத சூழலில், உங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு உங்களுக்கு பதிலாக உடனடி பதில்களை AI கொடுத்துவிடும்.
இந்த தொழில்நுட்பத்தில் உங்கள் குரலை செயற்கையாக உருவாக்கும் அம்சமும் இருக்கிறது. எனினும், முறையாக கட்டணம் செலுத்தி பதிவு செய்த பின்னரே, இந்த தொழில்நுட்பம் கிடைக்கும்.
அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, சுவீடன் மற்றும் சிலி போன்ற நாடுகளில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது.