பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அபிஷேக் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இவர் யூடியூப்பில் விமர்சகராக இருந்து மக்கள் மத்தில் பிரபலபமடைந்தவர் தான் அபிஷேக் ராஜா. இவர், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
இதில் கண்டெட் கொடுக்கும் ஆர்வத்தில் கிரிஞ்சாக பல விஷயங்களை செய்த அபிஷேக் ராஜா பாதியிலேயே போட்டியை விட்டு எலிமினேட் ஆகி வெளியேறினார்.
இவருக்கு ஏற்கனவே தீபா என்பவருடன் திருமணம் ஆகி அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதுபற்றி பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கூறி இருந்தார்.
இந்த நேரத்தில் அபிஷே்கின் முதல் மனைவி அபிஷேக் ராஜா தன்னை அடித்து துன்புறுத்தியதால் தான் அவரை விவாகரத்து செய்து பிரிந்ததாக அவரது முதல் மனைவி தீபா அந்த சமயத்தில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த வகையில் அபிஷேக் ராஜா திரும்பவும் காதலித்து புதிய துணையை கரம்பித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருமண கோலத்தில் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இவர்களுக்கு இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.