நகைச்சுவை கலைஞரான மதுரை முத்து அவரது 2-வந்து மனைவியை பிரியவுள்ளார் என்ற செய்திகள் வெளிவந்துள்ளது.
மதுரை முத்து
சின்னத்திரையில் நகைச்சுவை செய்து ரசிகர்களை கவர்ந்தவர் மதுரை முத்து. சின்னத்திரையில் துவங்கிய இவரின் பயணம் வெள்ளித்திரையிலும் பிரகாசமாக உள்ளது.
திரைப்படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளை என பிஸியாக இருக்கின்றார் மதுரை முத்து. குறிப்பாக, இவரின் தற்போதைய Property காமெடி பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாக உள்ளது.
இவருக்கு லேகா என்பவருடன் காதல் திருமணம் நடந்த நிலையில், அவர் விபத்து ஒன்றில் சிக்கி காலமானார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
அதனை தொடர்ந்து பெண் பிள்ளைகளுக்காக திருமணம் செய்து கொண்டார் மதுரை முத்து. முதல் மனைவி லேகாவின் தோழியான மருத்துவர் நீத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார் மதுரை முத்து. இந்த தம்பதிகள் தற்போது 2 பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
விவாகரத்து
இந்த நிலையில் அவரது இரண்டாவது மனைவி நீது தனது இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் அவர்கள் விவாகரத்து பெறவுள்ளார்களா? என்ற செய்திகள் வெளிவர துவங்கிவிட்டன.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு என்று ஒரு உயிர் வேண்டும், அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும்.அவருக்காகவே நான் பொட்டு வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறேன் என்று அழுதபடி பதிவிட்டிருந்தார்.