முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி சமீபத்தில் இத்தாலியில் கப்பலில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அம்பானி குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் ஸ்டைலான உடை மற்றும் தோற்றத்தால் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
குறிப்பாக முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தனது 60 வயதிலும் ஸ்டைலான தோற்றத்தின் மூலம் ஃபேஷன் பிரியர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியின் கடைசி நாளில் நீதா அம்பானி அணிந்திருந்த வாட்ச் பற்றிய தகவல் மேலும் ஆச்சரியத்தை கொடுக்கிறது.
ஏனெனில், Jacob And Co பிராண்டின் இந்தக் கைக்கடிகாரத்தின் விலை ரூ.3 கோடி.
இந்த விலையுயர்ந்த கடிகாரத்தில் 18k rose gold case உள்ளது. இதில் bezel மற்றும் inner ring set-இதன் விலையுயர்ந்த rainbow sapphire கல் உள்ளது.
இந்த நிகழ்விற்கு நீதா அம்பானி இளஞ்சிவப்பு பூக்கள் கொண்ட வெள்ளை நிற மேக்ஸி உடையை அணிந்திருந்தார். இந்த ஆடையை ஆஸ்கார் டி லா ரென்டா வடிவமைத்துள்ளார்.
இந்த ஆடையின் விலையைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்ர்கள். ஏனெனில் இந்த ஆடையின் விலை ரூ.6,02,819 என கூறப்படுகிறது.
ஆனால், நீதா அம்பானி அணிந்திருந்த கடிகாரத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆடை ஒன்றும் இல்லை.