மிதுன ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தினால் 3 ராசியினருக்கு பேரதிர்ஷ்டம் அடிக்கப் போகின்றது.
கிரகங்களின் ராஜாவான சூரியன் மற்றும் புதன் இணைந்து மிதுன ராசியில் புதாதித்ய ராஜயோகம் உருவாகப் போகின்றது.
இந்நிகழ்வானது ஜுன் 14ம் தேதி புதன் தனது சொந்த ராசியான மிதுனத்திலும், 15ம் தேதி சூரியனும் மிதுன ராசியில் நுழைகின்றதால் இந்த யோகம் ஏற்பட்டுள்ளது.
இந்த ராஜயோகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுவதுடன், 3 ராசியினருக்கு மிகவும் சிறப்பாகவும் அமையுமாம்.
மிதுனம்
புதாதித்ய ராஜயோகத்தால், மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறுவதுடன், திடீர் பண ஆதாயம் ஏற்படும், பொருளாதார நிலையில் நல்ல முன்னோற்றமும் ஏற்படுவதுடன், எந்த வேலையிலும் வெற்றியை பெறுவீர்கள்.
கன்னி
புதாதித்ய ராஜயோகம் கன்னி ராசியினருக்கு சிறப்பான பலனையும், பொருளாதார நிலையில் மாற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் பதவி மற்றும் சம்பள உயர்வு காணப்படுவதுடன், வருமான ஆதாயம் பெறுவதுடன், கடனிலிருந்து நிம்மதியும் கிடைக்கும்.
கும்பம்
கும்ய ராசியினருக்கு புதாதித்ய ராஜயோகத்தினால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியினை காண்பீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால், அனைத்து வேலையிலும் வெற்றி பெறுவதுடன், திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.