பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், 84 புலம்பெயர்ந்தோர் பயணித்த சிறுபடகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி
பிரித்தானிய அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எவ்வளவு முயற்சி எடுத்தும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோர் சற்றும் தங்கள் முயற்சியில் பின்வாங்கினாற்போலில்லை.
இன்று காலை, 84 புலம்பெயர்வோருடன் சிறுபடகொன்று பிரான்சிலிருந்து புறப்பட்டுள்ளது. அந்தப் படகு ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அதன் எஞ்சின் பழுதடைந்துள்ளது.
ஆகவே, மீண்டும் திரும்பி பிரான்சுக்கே சென்றுவிடலாம் என முடிவு செய்து கடகை செலுத்தியோர் படகைத் திருப்பும்போது, எதிர்பாராமல் அந்த படகு கவிழ்ந்ததாக, The Telegraph பத்திரிகை தெரிவித்துள்ளது.
குழந்தைகளும்…
அந்த படகில், ஒரு ஆறு மாதக் குழந்தை உட்பட மூன்று சிறுவர்களும் பயணித்துள்ளார்கள். படகு கவிழ்ந்து அதிலிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளிக்க, தகவலறிந்து வந்த பிரான்ஸ் படகொன்று அவர்களை மீட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.