சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் கொல்லப்பட்டனர்.
14,000க்கும் அதிகமானோர்
ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும், RSF துணை ராணுவ படைக்கும் இடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது.
இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த மோதலில் இதுவரை சுமார் 14,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் துணை ராணுவம் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது. கெசிரா மாகாணம் வாத் அல்-நவுரா எனும் கிராமத்தில் RSF படையினர் புகுந்துள்ளனர்.
100க்கும் மேற்பட்டோர் பலி
அவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூடான் ராணுவத்தினர் தங்கள் தாக்க திட்டமிட்டதால், அவர்களுக்கு பதிலடி கொடுக்க வாத் அல்-நவுராவின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள ராணுவ படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக RSF துணை ராணுவப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் சூடான் அரசு இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் இராணுவத்துடன் இணைந்த இடைக்கால இறையாண்மை கவுன்சிலும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.