நடிகை அசினின் சிறுவயது புகைப்படம் மற்றும் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அசின்
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை அசின். இவர் நடிகை மட்டுமின்றி பரதநாட்டியக் கலைஞரும் ஆவார்.
தமிழில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவரது நடிப்பு பேச்சு அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்ததுடன், பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இவர் தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு அரின் எனும் மகள் உள்ளார்.
தற்போது நடிகை அசினின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் நடிகை அசினின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1300 கோடி என்று கூறப்படுகின்றது.