தமிழ் நடிகர் பிரேம்ஜியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழில் சென்னை 600028 முதல் கஸ்டடி வரை வெங்கட்பிரபு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அவரது சகோதரர் பிரேம்ஜி.
நடிப்பு மட்டுமின்றி சில படங்களுக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். 45 வயதாகும் பிரேம்ஜிக்கு சமீபத்தில் திருமணத்திற்கு பெண் பார்த்ததாக செய்தி வெளியானது.
இந்த நிலையில் பிரேம்ஜி – இந்து ஜோடிக்கு திருமண வரவேற்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இருவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை திருத்தணி கோயிலில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. பிரேம்ஜியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.