வடகொரியாவின் கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் அனைத்து கொடூர நடவடிக்கைகளுக்கும் பின்னால் மூளையாக செயல்படுபவர் யார் என்பது குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் மிக மோசமான ஆட்சி, அல்லது கடும் போக்கு நடவடிக்கைகளுக்கு பின்னால், அவரது சகோதரி Kim Yo-jong மூளையாக செயல்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
வடகொரிய மக்கள் வேறு எந்த நாட்டவருடனும் தொடர்பில் இருக்க கூடாது என தடை விதிக்கப்பட்டதும், நூற்றுக்கணக்கான உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டதும் Kim Yo-jong வகுத்த திட்டங்கள் என்றே கூறப்படுகிறது.
வடகொரியாவில் தலைமை பொறுப்புக்கு அவரால் மிக சமீபத்தில் வர முடியாது என்றாலும், கிம் ஜோங் உன் தமது மகளை முன்னிறுத்த வாய்ப்பிருப்பதால், அவரும் மிக இளவயது என்பதால் Kim Yo-jong மேலும் பலம் பெறுவார் என்றே கூறுகின்றனர்.
அத்துடன், Kim Yo-jong முதன்மை பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டால், அது உண்மையில் பேரழிவுக்கு காரணமாக அமையும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர். Kim Yo-jong அளவுக்கு புத்திசாலி அல்ல கிம் ஜோங் உன் என குறிப்பிடும் நிபுணர்கள், தமது சகோதரரை இயக்குவதே Kim Yo-jong என்றே கூறுகின்றனர்.
சகோதரர்கள் இருவரும் சுவிட்சர்லாந்தில் வசித்த 1996 முதல் 2001 வரையான காலகட்டத்தில் Kim Yo-jong மிகவும் படிப்பாளியாக காணப்பட்டார் என்றே கூறப்படுகிறது. தமது சகோதரர் கிம் ஜோங் உன்னை விடவும் ஆங்கிலம், ஜேர்மன் மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் Kim Yo-jong.
மட்டுமின்றி, தமது சகோதரரை விட உலக நாடுகளின் அரசியலை உன்னிப்பாக கவனித்துவருபவர் Kim Yo-jong என்றே கூறப்படுகிறது.
தற்போதும் உயர் பதவியில் இருக்கும் Kim Yo-jong தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிரட்டல் விடுத்துள்ளதுடன், அவர்கள் எடுக்கும் முடிவு தான் வடகொரியாவை அடுத்த கட்ட நகர்வுக்கு நகர்த்தும் என்றும் எச்சரித்துள்ளார்.