இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் ஒருவர் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் சுலானீஸ் மாகாணத்தில் காலேம்பாங் கிராமத்தில் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வருபவர் பரிதா.
45 வயதான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் கிராமத்தினர் அனைவரும் அவரை தேடி வந்துள்ளனர்.
நேற்றைய தினம் பரிதாவின் உடைகளை கிராமத்தின் அருகே அவரது கணவர் கண்டுபிடித்த நிலையில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அப்பொழு அப்பகுதியில் 5 மீட்டர் நீளமுடைய 16 அடி ராட்சத மலைப்பாம்பை அவதானித்துள்ளனர். சந்தேகமடைந்து அதன் வயிற்கை கிழித்து பார்த்த போது, பரிதாவின் ஆடைகளுடன் அவரது உடல் முழுவதும் ஜீரணமாகாமல் இருந்துள்ளது.
இந்தோனேசியாவில் மலைப்பாம்புகள் மனிதர்களை விழுங்குவது சமீப காலமாக தொடர்கதையாகி வருகின்றது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்…