முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் தற்போது இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வு.
என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் CEO விரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்செண்டுடன் நடைபெறும் இந்த திருமணம், ஆடம்பரம் நிறைந்த கொண்டாட்டங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் தற்போது பெயர் பெற்றுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம்
மே 29ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரை பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் இருவருக்குமான திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரம்மாண்ட சொகுசு கப்பலில் நடைபெற்றது.
இந்த விழாக்களில் அமிதாப்பச்சன், ஷாருக்கான்,, ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன், ஆலியா பட், ஜான்வி கபூர், கேத்ரீனா கைஃப் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பிரபல பாடகி கேட்டி பெர்ரி உட்பட பல சர்வதேச நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டது.
சர்ச்சைகள்
திருமண கொண்டாட்டங்களுக்காக இத்தாலியில் உள்ள பல இடங்கள் பொதுமக்களுக்கு அடைக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
திருமண நிகழ்ச்சிகளில் இருந்து வரும் சத்தம் மற்றும் விருந்தினர்களின் நடத்தை காரணமாக உள்ளூர் மக்கள் மற்றும் விடுதி ஊழியர்கள் கடும் கோபமடைந்தனர்.
திருமண செலவு பல கோடி ரூபாய்க்கு அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையேயான வளர்ந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
திருமணம்
ஜூலை 12ம் திகதி மும்பையில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.