காங்கேசன்துறைப் பகுதியில் கடற்கரையோரமாக படையினர் வசமுள்ள 29 ஏக்கர் நிலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளர் நேற்று கடிதம் அனுப்பியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
காங்கேசன்துறையில் கடற்கரையோரமாக படையினர் வசமுள்ள நிலங்களில் மேலும் 29 ஏக்கர் நிலம் எதிர்வரும் ஏப்பிரல் 10ம் திகதிக்கு முன்பாக ஒப்படைக்கப்படும். இவ்வாறு ஒப்படைக்கப்படும் நிலங்களை அதன் உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கும் நோக்கிலேயே குறித்த நிலங்கள் விடுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் காங்கேசன்துறை தல்செவன உல்லாச விடுதிக்கும் ஊறணியில் விடப்பட்ட தற்காலிக இறங்குதுறைப் பிரதேசத்திற்கு கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் பிரதான வீதிக்கும்
கடல்கரைக்கும் இடையிலேயே குறித்த 29 ஏக்கர் நிலப்பரப்பும் உள்ளடங்குவாதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு எல்லையிடப்பட்ட பிரதேசத்தினை விடுவித்தாலே குறிப்பிட்ட பி்ரதேசத்தினில் 250 மீனவக்குடும்பங்கள் வாழ முடியும் என வலி வடக்கு மீள் குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தினர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜாவின் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.