நடமாடும் ஜூஸ் கடை ஒன்று சுத்தமாக சுகாதாரமின்றி இருந்த காரணத்தால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
நடமாடும் உணவு கடைகள் அதிகரித்துள்ளன. துரித உணவுகளை மக்கள் விரும்பும் நிலையில், இது போன்ற கடைகள் நகரின் பல இடங்களில் சாலை ஓரத்தில் நிற்கின்றன.
அதே நேரத்தில், இப்படி இருக்கும் பல கடைகளில் சுகாதாரமாக தான் உணவு பரிமாறப்படுகின்றனவா? என்றால் கேள்வி குறிதான். அப்படியிருந்தும் மக்கள் பல கடைகளை விரும்பியே வருகிறார்கள். பல இடங்களிலும் இருந்தும் குற்றச்சாட்டுகளும் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்த நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு பாதுகாப்பில் அதீத கவனத்துடன் செயலாற்றி வருகிறார்கள். பல கடைகளுக்கு அவர்கள் சீல் வைத்தும் வருகிறார்கள்.
ஜூஸ்
அப்படி ஒரு சம்பவம் தான் இன்றும் நடந்துள்ளது. புதுக்கோட்டை நகரில் நடமாடும் ஜூஸ் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் ஜூஸ் தயாரிக்கப்படுவதாக புகார்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நகராட்சி நல அலுவலர்களுடன் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற சோதனையில், சுகாதாரமற்ற முறையில் ஜூஸ் தயாரிப்பதை கண்டுபிடித்துள்ளார்கள். அக்கடை உரிமை இன்றியும் செயல்பட்டு வந்துள்ளது. கடைக்குள் துர்நாற்றம் வீசியுள்ளது. அதிர்ந்த அதிகாரிகள் 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்துள்ளர்கள்.