பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் நீண்ட நேரம் அமர்ந்தே இருந்து வேலை செய்வது, படிப்பது என்று உடல் உழைப்புகள் இல்லாததால் கொழுப்பு அங்கங்கே சேர்ந்து உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகின்றது.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசையில் பலரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதில் உணவுப்பழக்கம் மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது.
நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கான சக்தி மற்றும் ஆற்றல் நாம் உண்ணும் உணவில் இருந்தே உடலுக்கு கிடைக்கின்றது. என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில், சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று சாப்பிவது உடல் ஆராக்கியத்திலும் எடையை கட்டுக்குள் வைப்பதிலும் தாக்கம் செலுத்தும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? இது தொடர்பான அறிவியல் விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தற்காலத்தில் பலரும் உணவை ருசித்து சாப்பிடுவது கிடையாது. சாப்பிடும் போது தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டும், கைபேசியை பார்த்துக்கொண்டும் சாப்பிடுபவர்கள் ஏறாளம். இது முற்றிலும் தவறானது.
உணவை சாப்பிடும் போது உணவின் மீது முழு கவனத்தையம் செலுத்தி சுவையை உணர்ந்து நன்றாக மென்று சாப்பிட வேண்டியது அவசியம். இப்படி சாப்பிடுவது செரிமான அமைப்பு சீராக செயற்பட பெரிதும் துணைப்புரிகின்றது.
அதுமட்டுமன்றி சாப்பிடும் போது வாயை மூடி காற்று அதிகமாக உட்செல்லாதவாறு சாப்பிடுவதே ஆரோக்கியமான முறை. அந்த வகையில், சாப்பிடும் போது 32 முறை மென்று தான் உணவை விழுங்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துறைக்கின்றனர்.
இவ்வாறு 32 முறை உணவுவை மெல்லும் போது பாதி உணவை சாப்பிடும் போதே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதாகவும் இதனால் அதிக உணவு உண்பதை தவிர்க்க முடியும் எனவும் அதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த முறை பழங்கலாத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் பழக்கமாக காணப்படுகின்றது. 32 முறை மென்று சாப்பிடுவது செரிமானத்தை விரைவுப்படுத்தவும் உதவுகின்றது. இருப்பினும் இது தொடர்பில் அறிவியல் ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிட்ததக்கது.