திருகோணமையில் உள்ள பகுதியொன்றில் வீதியில் கிடந்த பணப்பை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர் ஒருவரின் நேர்மையான செயல் தொடர்பில் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
தோப்பூர் பகுதியைச் சேர்ந்த அனஸ் நிஜாமுதீன் என்பவர் கிண்ணியாவிற்கு செல்லும் வீதியில் கிடந்த பணப்பை ஒன்றை கடந்த 19 ஆம் திகதி கண்டெடுத்துள்ளார்.
அந்த பணப் பையில் 19560 ரூபாய் பணமும், முக்கிய ஆவணங்களும் காணப்பட்டிருந்தன.
இதில் பணப்பையின் உரிமையாளரை தொடர்பு கொள்வதற்கான எதுவித தொலைபேசி இலக்கங்களும் இருக்கவில்லை.
இருப்பினும் அந்த பையில் அவரது ஆவணங்கள் இருந்தமையால், அதனை ஆதாரமாக வைத்து பணப்பையை கண்டெடுத்த நபர், சமூக வளைத்தளங்களில் உரியவருக்கு தகவல் சேரும்படியாக பதிவொன்றை இட்டுள்ளார்.
இந்த பதிவினை பணப்பையை தொலைத்த நபர் பார்வையிட்டு உரிய நபரை தொடர்பு கொண்டு தனது பணப் பையை இன்று காலை பெற்றுக் கொண்டதோடு, உதவிய நிஜாமுதீனுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
தோப்பூர் மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஜெஸாகிர் (சலீம்) ஊடாக குறித்த பணப்பையும், ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டது.
பணப்பையை தொலைத்த நபர் பிபிலைப் பகுதியைச் சேர்ந்த செனைவிரத்ன முதியன்சலாகே சதுரங்க குமார என்பது குறிப்பிடத்தக்கது.