2050 ஆம் ஆண்டளவில் நாட்டின் சனத்தொகையில் கால் பகுதியினர் வயது முதிர்ந்தவர்களாக இருப்பார்கள் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல (Wasantha Athukorala) தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தரவு அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார்.
இலங்கையில் 65 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை மொத்த சனத்தொகையில் 18% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய முதியோர் செயலகத்தின் தரவு அறிக்கைகள், 2050 ஆம் ஆண்டளவில், இந்நாட்டில் உள்ள முதியோர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 27.6% ஆக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் , 1971 ஆம் ஆண்டுகளில் முதியவர்களின் எண்ணிக்கை 06.3% இருந்ததாக புள்ளிவிபரவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.