பிரபல நடிகை அணுஸ்கா சிரிக்கும் நோயால் பாதிக்கப்பட்டு அதனால் படும் கஷ்டத்தை இணையத்தில் வெளியாக்கி பகிர்ந்து கொண்டுள்ளார்.
சிரிப்பு நோய்க்கு ஒரு சிறந்த மருந்து என்பது தெரிந்தது. ஆனால் இது அதிகமாக பல பாதிப்புக்களை ஏற்படுத்தகூடியது. ஆமாம் இது நோயாக வந்தால் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
இன்டியாகிளிட்ஸ் வீடியோ நேர்காணலில், அனுஸ்கா ஷெட்டி ஒரு அரிதான சிரிக்கும் நிலையால் அவதிப்படுவதை வெளிப்படுத்தினார். அவர் கூறும் போது “எனக்கு சிரிப்பு நோய் உள்ளது.
‘சிரிப்பது ஒரு பிரச்சனையா?’ என நீங்கள் யோசிக்கலாம். நான் சிரிக்க ஆரம்பித்தால், 15 முதல் 20 நிமிடங்கள் வரை என்னால் நிறுத்த முடியாது. நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது அல்லது ஷூட்டிங் போது, நான் தரையில் உருண்டு சிரிப்பேன்.
இதனால் படப்பிடிப்பு பலமுறை நிறுத்தப்பட்டது”, என்றார். இந்த “சிரிக்கும் நோய்” மருத்துவத்தில் சூடோபுல்பார் பாதிப்பு (pseudobulbar affect) என்று அழைக்கப்படுகிறது என நரம்பியல் மருத்துவர் கூறுகிறார்.
இந்த நோய் உங்களுக்கும் இருந்தால் இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட சில மருந்துகள் உள்ளன. குறிப்பிட்ட சிகிச்சை ஆலோசனைக்கு மருத்துவரை அணுகவும்.