அஜித் நடிக்கும் விவேகம் படத்தில் அஜித் ஒரு புலனாய்வு அதிகாரி. படம் கிளாஸா வரணும்ன்னு வெளிநாட்டிலேயே முக்கால்வாசி படத்தை எடுத்துட்டு இருக்காங்க.
இந்த படத்தை அஜித்தின் வீரம்,வேதாளம் படங்களை இயக்கிய சிவாவே மூன்றாவது முறையாக இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் என்று இரண்டு ஹீரோயின்கள்.
இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அஜித் சிக்ஸ் பேக் உடலுடன் போஸ் செய்திருந்தார். அந்த போஸ்டரை கண்டதும், நெட்டிசன்கள் கிராபிக்ஸ் என்று கிண்டல் செய்தனர்.
சிவா அதற்கு விளக்கம் அளித்ததுடன், அஜித் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக உடற்பயிற்சி செய்து அந்த உடலை கொண்டு வந்தார் என்றார்.
சரி, அத்தனை ஆபரேஷன்கள் செய்த அஜித் இவ்வளவு கடினமாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன?
அங்கே தான் அந்த நடிகர் இருக்கிறார்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளவர் பாலிவுட் ஹீரோ ஸ்லிம் அண்ட் ஸ்லீக் விவேக் ஓபராய். நன்றாக உடற்பயிற்சி செய்த அந்த நடிகர் வில்லனாக இருக்கும்போது, தொந்தியும் தொப்பையுமாக நம்ம ஹீரோ இருந்தா நல்லா இருக்காதுன்னு அஜித்தே சிக்ஸ் பேக்கில் இறங்கினாராம்.
இன்னுமொரு அஜித் லுக், வில்லன் லுக், அக்சரா ஹாசன் லுக் என்று அடுத்தடுத்து ரசிகர்களை மகிழ்விக்க, தனி போஸ்டர்களாக வெளியிடப்படுமாம்.