எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கருஞ்சீரகத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மரணத்தை தவிர அனைத்து விதமான உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் கருஞ்சீரகம், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு உதவுகின்றது.
சரியான உணவை சரியான அளவில் சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் நோய்கள் எதுவும் அணுகாது என்ற சொல்லுக்கு ஏற்ப கருஞ்சீரகமும் உதவுகின்றது.
உங்களுடைய தினசரி வழக்கத்தில், மருத்துவ குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் உட்பட பல உடல் நல பிரச்சனைகளை தடுக்கலாம்.
கருஞ்சீரகத்தை பொடியாக பொடித்து வைத்துக்கொண்டு காலை எழுந்ததுவும் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு கிளாஸ் வெந்நீருடன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
இதுவே நீங்கள் இனிப்பு சுவையினை விருப்பினால் குறித்த பொடியுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். இவ்வாறு நீங்கள் எடுத்துக்கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
கருஞ்சீரகத்தில் உள்ள நார்ச்சத்து உள்ளதால் நீண்ட நேரத்திற்கு நிறைவாக உணர்வதுடன், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எடை இழப்பிற்கும் உதவு கின்றது.
இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தவும், கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகின்றது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதுடன், சர்க்கரை நோய் வராமலும் தடுக்கின்றது.
நினைவாற்றலை மேம்படுத்தி மூளையை சுறுசுறுப்பாகவும், விழிப்புடனும் செயல்பட உதவுகின்றது.
அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்ற பொதுவான சில நோய் தொற்றுகளை தடுப்பதற்கும், ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறந்த மருத்தாக கருஞ்சீரகம் உதவுகின்றது.
மூட்டுவலியினால் அவதிப்படுபவர்கள் கருஞ்சீரகத்தினை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லதொரு நிவாரணம் கிடைக்கும். கழுத்து, முதுகு மற்றும் மூட்டு வலியிலிருந்தும் சிறந்த நிவாரணம் பெறலாம்.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், சிறுநீரக கற்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலியை போக்கவும் கருஞ்சீரகத்தை தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.
சோர்வு மற்றும் சோம்பல் உணர்வுடன் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தின் தண்ணீரை தேனுடன் கலந்து பருகினால் நல்லதொரு மாற்றத்தை பெறலாம்.
நல்ல அடர்த்தியான கருமையான கூந்தலை பெற கருஞ்சீரகம் உதவுகின்றது.
உடம்பில் வேறேனும் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனை பெயரில் இதனை எடுத்துக்கொள்ளவும்.