திருமணம் செய்ய வந்த வருண் மணியனை த்ரிஷா ஏமாற்றியதாக ஆன்மீகவாதி ஏ எல் சூர்யா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை த்ரிஷா.
இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார்.
இதனை தொடர்ந்து பல படங்களை தன்வசம் வைத்திருக்கும் த்ரிஷா சமிபக் காலமாக சர்ச்சைகளில் அடிப்பட்டு வருகிறார்.
இது தொடர்பான விளக்கம் எதுவும் இதுவரையில் வெளிவராத நிலையில் ரசிகர்கள் கேள்வி அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், ஆன்மீகவாதி ஏ எல் சூர்யா என்பவர் த்ரிஷாவின் உண்மை வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது என பேட்டியொன்றில் ஓபனாக பேசியுள்ளார்.
அதில், “ த்ரிஷா பற்றி உங்களுக்கு என்ன தெரியும். த்ரிஷா திருமணம் செய்து கொள்ள வந்தவர் தான் வருண் மணியன். இவர் த்ரிஷாவால் பல கோடி ஏமாற்றப்பட்டுள்ளார். த்ரிஷா அப்படி என்ன என்ன வேலை செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.
இறைவனுக்குத்தான் தெரியும். மேலும், த்ரிஷாவுடன் நட்பு வைத்துக் கொண்டவர்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வரும். அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினை வரும்.” என பல சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் த்ரிஷா பற்றிய சர்ச்சைகளுக்கு அவர் தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.