கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவு வகைகள் என்னவென்று இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக மகிழ்ச்சியான காலம். கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இந்த மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவையே.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும்.
பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம்.
அதாவது, சராசரியாக சாப்பிடும் உணவோடு, வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும்.
* கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்து விடும்.
* ஸ்வீட்டுக்கு போடும் கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டு படும். மயக்கமாக இருந்தால் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ் போன்றவை குடிக்கலாம்.
* தலைவலி, ஜுரம், சளி, பல் வலி போன்றவைக்கு டாக்டரிடம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம். சூடு தன்மை உள்ள பழங்கள் காய்கள், உணவுகள் அதிகம் சாப்பிடவேண்டாம்.
* சாப்பிடக் கூடாத பழங்கள் கொய்யா , பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை. தினம் சாப்பிட வேண்டிய பழங்கள்: ஆப்பிள், பச்சை திராட்சை,மாதுளை, ஆரஞ்ச்.
* இறால், சிக்கன் போன்றவை கூட ரொம்ப சூடு. இதெல்லாம் கூட தவிர்ப்பது நல்லது. சிக்கன் நிறைய தயிர் சேர்த்து செய்து கொஞ்சமாக சாப்பிட்டு கொள்ளலாம்.
* புரோகோலி மற்றும் ஸ்பினாச் கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளது. இவை இரண்டையும் அடிக்கடி சமைத்து உண்ணலாம். ஸ்பினாச் சூப் கூட செய்து குடிக்கலாம்.
* நெல்லிக்காய் நிறைய வாங்கி சர்க்கரை பாகு காய்ச்சி, அதில் நெல்லிக்காயை வேகவைத்து, பாகில் ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம். பெருங்காயம், பூண்டு,சோம்பு சிறிது குறைத்து பயன்படுத்தவும்.