ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு குணங்கள் உள்ள நிலையில், தற்போது சோம்பேறிகளாக இருக்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்:
சோம்பேறி கணவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ரிஷபம் ராசியினர் தான். வீட்டில் சின்ன சின்ன வேலைகளைக் கூட செய்வதற்கு முன்வராத இவர்கள் பயங்கர சோம்பேறியாக இருப்பார்கள். வீட்டுப் பொறுப்பினை கூட பார்க்காத அளவிற்கு சோம்பேசியாக இருக்கும் இவர்கள், திருமணம் செய்த பின்பு அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமாம்.
சிம்மம்:
சிம்ம ராசியினரும் சற்று சோம்பேறித்தனம் கொண்டவர் தானாம். இவர்களிடம் ஒரு கடினமான பணியைக் கொடுத்தால் அதனை வேறொருவரிடம் ஒவ்வடைத்துவிடுவார்கள். இந்த ராசியினரை திருமணம் செய்தால் இவர்களிடம், அன்பு மற்றும் வேறு எந்த எதிர்பார்ப்பையும் மற்றவர்கள் எதிர்பார்க்க வேண்டாம்.
தனுசு:
சில தருணங்களில் தனுசு ராசியினரைப் போன்று யாரும் சோம்பேறியாக இருக்கவே மாட்டார்கள். இவர்கள் தங்கள் மீது வைக்கப்பட்ட பொறுப்பிலிருந்து தப்பிக்கவே விரும்புவார்கள். இந்த ராசியினரை திருமணம் செய்தவர்கள், உங்களை அவர்கள் சில தருணங்களில் புறக்கணிப்பதைக் கூட உணரலாம்.
மீனம்:
மீன ராசியினரும் பயங்கர சோம்பேறியாகவே இருப்பார்கள். நீங்கள் இந்த ராசியினரை திருமணம் செய்தால், நடைமுறை வாழ்க்கையில் வாழ்ந்தாலும், இயற்கையில் பல விடயங்களில் சோம்பேறிகளாகவே இருப்பார்கள்.