புவி வெப்பமயமாதலே கடலால் சில நாடுகள் மூழ்கப்போவது உறுதியாகிறது என நாசா விஞ்ஞானிகள் முழுக்க முழுக்க கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நமது பூமியை சுமார் 70 சதவீதம் நீர் சூழ்ந்துள்ளது. மனிதர்களால் உருவாக்கப்படும்கழிவுகளை உள்வாங்கி, இந்த பூமி பாதுகாப்போடு இயங்குவதற்கு எந்த அளவுக்கு கடல் உதவி செய்கிறதோ என விஞ்ஞானிகள் சந்தேகித்து வருகின்றனர்.
இந்த கடல் பூமியை சூழ்ந்ததற்கான காரணம் தொழிற்சாலைகள், வாகனங்கள் பெருகிவிட்ட சூழலில், அதில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு மூலம் காற்று மாசடைவதோடு, அதில் பூமியின் வெப்பத்தையும் அதிகரிக்கிறது.
அதேபோல், பசுமை இல்ல வாயுக்களாலும் புவி வெப்பமயமாதல் நடைபெறுகிறது. இதனால், பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகின்றன.
இது பூமி கடலால் மூழ்கடிக்கப்படும் என்பதையே காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் கடந்த 1992ஆம் ஆண்டு கடல் மட்டத்தை அளவிடும் முறை தொடங்கியது.
அப்போதில் இருந்து ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 32 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 4 அங்குலம் அதாவது 10 செ.மீ. வரை உயர்ந்துள்ளது.
கடலில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி நீர்மட்டம் உயருவதோடு, சூரிய வெப்பத்தாலும் கடல் நீர் விரிவடைந்து அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறது. இதுவே, அடிக்கடி கடலோரப் பகுதிகளில் வெள்ளம் வருவதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து நாசா விஞ்ஞானிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
Unparalleled views of sea level rise ⬆️🌊🛰
Global sea levels have risen more than 4 inches (102 millimeters) since measurements began in 1992, increasing coastal flooding in some places. Learn more: https://t.co/3AlxV8yHei pic.twitter.com/QuGbB3ls7p
— NASA Climate (@NASAClimate) June 27, 2024