சிறுநீரக புற்றுநோய் வந்தால் ஆரம்பகால அறிகுறிகள் சிலவற்றை நமது உடல் வெளிப்படுத்தும் அது எப்படியான அறிகுறிகள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான காரணம் சிறுநீரக செல் கார்சினோமா ஆகும். இந்த நோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் சிகிச்சை பெற்று நிவாரணம் பெறலாம். இந்த சிறுநீரக புற்றுநோயின் முதல் அறிகுறி எல்லோருக்கும் வராது.
சிலருக்கு கட்டி பெரிதாக வளர்ந்த பின்னரே அறிகுறிகள் உண்டாகும். அப்படி இந்த நோய்க்கான அறிகுறிகள்
1. சிறுநீரில் இரத்தம்
2. வயிற்றின் ஓரத்தில் கட்டி
3. பசியின்மை
4. தொடர்ந்து ஒரு பக்கத்தில் மட்டும் இடைவிடாத வலி
5. காரணமின்றி உடல் எடை குறைதல்
6. காரணமின்றி காய்ச்சல் வந்தாலும் உடனே குணமாகாமல் வாரக்கணக்கில் நீடிக்கும்
7. சோர்வு
8. உங்கள் கணுக்கால் மற்றும் முழங்கால்களில் வீக்கம்
9. சிறுநீரக புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கு பரவினால், இதுபோன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்
10. மூச்சு திணறல்
11. இருமலில் இரத்தம்
12. எலும்புகளில் வலி இந்த அறிகுறிகள் எல்லோரக்கும் ஒன்று போல வராது.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் சிறுநீரக புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமுள்ளது. ஆகையால் ஆரோக்கியமான டயட், சீரான உடற்பயிற்சி ஆகியவற்றை கடைபிடித்து உங்கள் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.