பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், வாழ்க்கையின் வெற்றியை சீக்கிரம் அடைய என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகளை சாணக்கியர் கூறியுள்ளார். அப்படி என்ன டிப்ஸ்களை சாணக்கியர் கூறியுள்ளார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் நாம் செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். சக பணியாளர்களின் அணுகுமுறை, வாய்ப்புகள் போன்றவற்றை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும். அறியாமல் ஒருவர் தவறு செய்யும் போது அந்த சவாலை எதிர்க்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
2. வாழ்க்கை வெற்றிப் பெற காலம் தேவை என சாணக்கியர் கூறுகிறார். வேலையை திட்டமிட்டு நேரத்திற்கு செய்யும் போது அதனால் உங்களுக்கு மகிழ்ச்சி மட்டுமே கிடைக்கும். பொறுமையுடன் பணியை தொடர வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்.
3. ஒவ்வொருவருக்கும் அவரவர் திறன்களில் நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு முயற்சியில் இறங்கிய பின்னர் அதிலிருந்து வெளியில் வர முயற்சிப்பதை விட இறங்கிய வேலையை சரியாக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். வெற்றி என்பது மிக தொலைவில் இருக்கின்றது என்பதனை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
4. நண்பனையும் எதிரியையும் வேறுபடுத்திப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையான நண்பர்கள் உங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள். நண்பர் போல் வேடமிட்டுக் கொண்டு உங்களை அழிக்கும் ஆட்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம். நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா? சிறந்த நண்பர்களுடன் பழக வேண்டும்.