24 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் 19 ஆம் திகதி இரண்டாவது முறையாக ரஷிய அதிபர் புதின் வட கொரியாவுக்கு பயணம் செய்துள்ளார். இதன்போது ரஷிய தயாரிப்பான அவுரஸ் லிமவுசைன் [Aurus என்ற சொகுசு காரை பரிசளித்தார் புதின்.
அந்த காரில் இருவரும் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர். கிம் ஜாங் உன் அருகில் அமர்ந்திருக்க புதின் சொகுசு காரை ஓட்டிக்காட்டினார். பின்னர் கிம் ஜாங் உன் காரை ஆர்வமாக ஓட்டிப்பார்த்தார்.
இந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. புதின் பரிசளித்த அவுரஸ் லிமவுசைன் கார் குறித்த சர்ச்சைக்குரிய உண்மை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, அவுரஸ் லிமவுசைன் கார்களை அவுரஸ் மோட்டார்ஸ் என்ற ரஷிய நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் கார் தயாரிப்பிற்கான உதிரிபாகங்களை அந்நிறுவனம் தென் கொரியா, சீனா, இந்தியா, துருக்கி, இத்தாலி என பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாக ரியூட்டர்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
வட கொரியாவும் தென் கொரியாவும் பரம் எதிரிகளாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வட கொரிய அதிபருக்கு தென் கொரிய உதிரி பாகங்களைக் கொண்ட காரை புதின் பரிசளித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.