நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக வெடித்த சர்ச்சைக்கு மத்தியில், இதற்கு காரணம் மாமியாரின் வளர்ப்பு மகன் என்று கூறப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆர்த்தியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். அவரது தாய் சுஜாதா சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகின்றார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பிரிய உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதற்கு ஏற்ப ஆர்த்தியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியின் புகைப்படத்தினை நீக்கவும் செய்தார். பின்பு ஜெயம் ரவியை Unfollow செய்தார். இதனால் ரசிகர்களுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் மாமியார் தனது தயாரிப்பில் நடிக்க கூறியுள்ளதாகவும், அதற்கு ஜெயம் ரவி அதிகமான சம்பளம் கேட்டதாகவும், இதனால் மனக்கஷ்டம் ஏற்பட்டதுடன், மனைவியுடன் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறுகையில், சுஜாதாவிற்கு வளர்ப்பு மகன் ஒருவர் உள்ளதாகவும், தான் நடத்திவரும் தயாரிப்பு நிறுவனத்தின் பணிகளை அவர் பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
சங்கர் என்ற அந்த வளர்ப்பு மகன் கூறுவதை தான் ஜெயம் ரவி கேட்க வேண்டும் என்று சுஜாதா அதிகாரமாக கட்டளையிட்டதால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாம்.
அந்த மோதல் தற்போது கணவன், மனைவி இருவருக்கும் இடையே பிரிவு வரை சென்றுள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.