புதிதாக பிறக்க இருக்கும் ஜுலை மாதத்தில் ராஜவாழ்க்கை அடையும் அதிர்ஷ்டசாலி ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிட ரீதியில் பிறக்கும் புதிய மாதத்தில் சில கிரகங்களில் மாற்றம் ஏற்படும் போது அதனைப் பொறுத்து ராசியினருக்கு அதிர்ஷ்டம் காணப்படும். மேலும் புதிய மாதம் சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படும்.
கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பார்வையில் புதிதாக பிறக்கும் ஜுலை மாதத்தில் அதிர்ஷ்ட ராசியினரை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த புதிய மாதத்தில் அனுகூலமான பலன் கிடைப்பதுடன், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும். கடின உழைப்பிற்கான முழு பலன் கிடைப்பதுடன், வருமானத்திலும் நல்ல உயர்வை பெறுவீர்கள். பணியிடத்திலும் இந்த மாதம் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
ஜுலை மாத கிரக மாற்றத்தின் படி, இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து உங்கள் வருமானம் நன்றாகவே இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறும் நீங்கள், இதற்காக சில முயற்சிகள் செய்ய வேண்டும்.
கடகம்
ஜுலை மாதத்தில் கடக ராசியினரின் நம்பிக்கை அதிகரிப்பதுடன், ஆன்மீக நடவடிக்கைகளில் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைப்பதுடன், புதிய வேலையும், வருமானமும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த ஜுலை மாதம் பல அற்புதம் நிகழ உள்ளது. ஆரோக்கியம் மேம்படுவதுடன், நிதிநிலை முன்பை விட சிறப்பாகவே இருக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டாவதுடன், பணியிடத்திலும் உங்களது நிலை வலுவாகவே இருக்கும்.
கன்னி
ஜுலை மாதத்தில் கன்னி ராசியினருக்கு அனைத்து துறையிலும் லாபமும் வெற்றியும் கிடைக்குமாம். அதிர்ஷ்டம் நன்றாக இருப்பதால் காரியங்கள் கூட வெற்றியாகும். அதிக வருமானம் இருக்கும், முதலீட்டில் லாபமும் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த புதிய மாதத்தில் நிதி நிலை நன்றாக இருப்பதுடன், முக்கியமான திட்டங்களை முன்னெடுத்துச் செல்விர்கள். பணியிடத்தில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், தற்போதைய வேலையில் மாற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசியினருக்கு இந்த மாதம் லாபகரமானதாக இருப்பதுடன், வாழ்வில் வசதிகள் அதிகரிக்குமாம். தொழில் வளர்ச்சியின் வேகம் அதிகரிப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். புதிய வேலை கிடைக்கும். தொழில் செய்பவர்கள் முன்னேற முயற்சிகளை செய்வார்கள். அவசரமாக முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.