பொதுவாகவே குழந்தைகள் புது புது வகையில் சமையல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
குறிப்பாக குழந்தைகள் நல்ல கவர்ச்சிகரமான நிறத்தில் அழகாக இருக்கும் உணவுகளையும் சாப்பிடுவதற்கு இலகுவாக இருக்கும் உணவுககையும் யாருடைய வற்புறுத்தலும் இன்றி சாப்பிடுவார்கள்.
அப்படி குழந்தைககள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் தக்காளி சாதத்தை பத்தே நிமிடத்தில் அட்டகாசமான சுவையில் எவ்வாறு தயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சாதம் – 2 கப்
தக்காளி – 3
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு – 1 தே. கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தே. கரண்டி
கடுகு – 1 தே. கரண்டி
சீரகம் – 1/2 தே. கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
வரமிளகாய் – 1
பெரிய வெங்காயம் – சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (கீறியது)
மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் சாதத்தை தயார் செய்து நன்றாக ஆரவிட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் தக்காளியை போட்டு நன்றாக பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்திதை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின் அதனடன் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்றாக வேகவிட வேண்டும்.
கடைசியாக வடித்து வைத்துள்ள சாதத்தையும் அதனுடன் சேர்த்து நன்கு ஒருசேர கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் அதனைவரும் விரும்பும் வகையில் சுவை நிறைந்த தக்காளி சாதம் தயார்.