வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த அமர்வை ஏற்கனவே கடந்த மாதம் 22ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தபோதும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனமுற்றிருந்ததால் அமர்வு பிற்போடப்பட்டது.
முதலமைச்சர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்றைய அமர்வை பிற்போட முடியுமா எனக் கோரி வடக்கு மாகாண சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எனினும், இன்றைய அமர்வை நடத்துவதோடு, இப்பிரச்சினை தொடர்பான பிறிதொரு அமர்வை எதிர்வரும் மே மாதம் நடத்தலாமென முதலமைச்சருக்கு அவைத்தலைவர் பதில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அத்தோடு, இவ் அமர்வை பிற்போடக் கூடாதென மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் கேட்டுக்கொண்டதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.