பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி அவர்களின் ஆளுமை, பண்புகள் மற்றும் எதிர்கால வாழ்க்கை என்பவற்றில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே தீய எண்ணங்களை அதிகம் கொண்டவர்களாக இருப்பபார்கள்.
இவர்கள் சில சமயங்களில் மிகவும் ஆபத்தானவர்களாகவும் அறியப்படுகின்றார்கள். இப்படிப்பட்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் ஆபத்தான எண்ணங்களை கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்களின் ராசி சின்னம் எப்படி விஷத்தன்மை கொண்டதாக இருக்கின்றதோ, இது போல் இவர்களும் கூட இருப்பவர்களுக்கு சில சமயங்களில் அதிக ஆபத்தை ஏற்படுத்த கூடியவர்கள்.
இவர்களிடம் இயல்பாகவே சுயநலம் அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் மர்மம் நிறைந்தவர்களாக இருப்பார்கள் இவர்கள் என்ன நினைக்கின்றார்கள், என்ன செய்யப்போகின்றார்கள் என்பதை யாராலும் எதிர்வுகூறவே முடியாது.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் தீய சிந்தனைகளை அதிகம் கொண்டிருப்பார்கள். குறிப்பாக ஆண்கள் விருச்சிக ராசியினரை மிஞ்சும் அளவுக்கு ஆபத்தானவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் செய்யக்கூடாத அனைத்து விடயங்களையும் செய்தாலும் தங்களின் அப்பாவி முகத்தினால் வெளி உலகத்திடமிருந்து அனைத்தையும் மறைத்து விடுவார்கள். இவர்கள் இரட்டை வேடம் அணிவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் ஜாக்கிரதையாக பழக வேண்டும்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்களிடம் மிகவும் மோசமாக தீய குணங்கள் இருக்கும். அது இவர்களிடம் உறவு கொள்பவர்பகளுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும்.
இவர்கள் மிகவும் கோபக்காரர்களாகவும் தங்களின் தவறுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளும் குணம் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.
தங்களின் சுயநலத்திற்காக யார் பாதிக்கப்பட்டாலும் அதற்காக துளியளவும் கவலையடைய மாட்டார்கள். இவர்களிடம் உறவு வைத்திருப்பவர்கள் எந்நேரமும் அவதானமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த ஆண்கள் மற்றவர்களை எளிதில் மோசமாக விமர்சிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களிடம் அதிகமாக குறை கண்டுப்பிடிக்கும் இவர்கள் தங்களிடம் இருக்கும் குறைகள் பற்றி ஒருபோதும் சிந்திக்கவே மாட்டார்கள்.
தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் கருதி மாத்திரமே இவர்கள் மற்றவர்களுடன் நட்பு கொள்வார்கள். இவர்களின் உறவு பல சமயங்களில் ஆபத்தாகவே முடியும்.