காலை நேரத்தில் காஃபிக்கு பதிலாக இந்த 5 பானங்களில் எதாவது ஒன்றினை எடுத்துக் கொண்டால் உடம்பிற்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.
பொதுவாக பல நபர்கள் காலையில் எழுந்ததும் காஃபியில் தான் அன்றைய தினத்தையே தொடங்குவார்கள். ஆனால் கா.பிக்கு பதிலாக வேறு சில பானங்களை நீங்கள் குடிக்கலாம்.
அவ்வாறு குடிப்பதால் உங்களது உடம்பில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறுவதுடன், சரீரமும் பளபளப்பாகவே இருக்குமாம்.
காலையில் டீ மற்றும் காஃபி குடிக்கும் பழக்கம் இருந்தால் இவை ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுத்தும். இத்தருணத்தில் காலையில் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் எடையைக் குறைக்கவும், ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்து காணப்படும் கிரீன் டீ தினமும் காலையில் அருந்துவதால், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு அதிகரிக்கின்றது. உடல் எடையும் குறையும்.
காலையில் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடம்பிலுள்ள நச்சுக்களை வெளியேற்கும், மேலும் கெலாஸன் உற்பத்திற்கு உதவுகின்றது.
மஞ்சள் தூள் கலந்து பருகப்படும் பாலில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதுடன், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் கொண்ட இதனை வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் ஆரோக்கியம் மற்றும் அழகுக்கு நல்லதாகும்.
காலையில் தேங்காய் நீர் பருகுவதால், சரும பிரச்சனை குறைந்து, சருமத்தின் பொலிவை பராமரிக்கின்றது. ஏனெனில் தேங்காய் நீரில் மெக்னீசியம் பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன.
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஜுஸை காலையில் பருகினால் சருமம் பளபளப்பாக்கவும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.