பொதுவாகவே இந்து சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில தாவரங்களுக்ககு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் வெட்டிவேர் செல்வ செழிப்பை அள்ளிக்கொடுக்ப்பது மட்டுன்றி இருக்கும் இடத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது என குறிப்பிடப்படுகின்றது.
இந்த தாவரத்தின் மருத்துவ பயன்கள் தொடர்விலும் இதனை கொண்டு எவ்வாறு பணவரவை அதிகரிக்கலாம் என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
எவ்வாறு பணவரவை அதிகரிப்பது?
வெட்டிவேர் மண்ணுக்குள் கொத்துக்கொத்தாக வளரக்கூடிய ஒரு புல் இனத்தை சேர்ந்த தாவரமாகும். இதனைப் பிடுங்கி எடுத்த பின்னர் அதன் தண்டு பகுதியை பயன்படுத்தி மீண்டும் வெட்டிவேர் தாவரத்தை வளர்க்க முடியும்.
வெட்டிவேரிலிருந்து தயார் செய்யப்படும் தைலம் மிகவும் பிரவல்யம் வாய்ந்தது. இதனை கை, கால் பிடிப்புகளுக்குத் தொடர்ச்சியாக பயன்படுத்தினால் விரைவில் சிறந்த தீர்வு கிடைக்கும்.
அது மாத்திரமன்றி காய்ச்சல் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெட்டிவேருக்கு அதிகமாக காணப்படுகின்றது. குளியல் சோப்புகளிலும் கூட வெட்டிவேர் வாசனைக்காக பயன்படுத்தப்படுகின்றது.
வெட்டிவேர் வாசனையை சுவாசிப்பதால் தலைவலி நீங்கும், உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். மண்பானை தண்ணீரில் சிறிது வெட்டிவேரைச் சேர்த்து ஊறவைக்க, நீருக்குச் சுவையும் பலன்களும் பலமடங்கு அதிகரிக்கும்.
இந்த தண்ணீரை குடிப்பால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு, உடல்சோர்வு, சரும நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை நாட்களில் ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை பூஜை அறையில் வைத்து, அதில் வெட்டி வேரையும், எலுமிச்சைப் பழத்தையும் போட்டு வைத்தால் அதிலிருந்து வெளிவரும் நேர்தறை ஆற்றலால் வீட்டில் செல்வ செழிப்பு மற்றும் பணப்புலக்கம் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
வெட்டிவேருக்கு இயற்கையாகவே பணத்தை ஈர்க்கும் ஆற்றல் காணப்படுவதாக சாஸ்திஜரங்ளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணத்தை ஈர்ப்பதற்குப் பல்வேறு பொருட்களில் வெட்டிவேருக்கும் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
வியாபாரிகள் பணம் புழங்கும் இடங்களில் வெட்டிவேரை வைத்தால் கண் திருஷ்டியில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் எதிர்மறை சக்திகளும் நீங்கி லாபம் பெருகும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதனை பூஜை அறையில் வைப்பதால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.