பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய கூற்றின் படி, தனிநபர்களுடன் உறவுகளை ஏற்படுத்த நினைப்பதற்கு முன் அவர்களை பற்றி நன்கு மதிப்பிடுவது முக்கியம் என கூறுகிறார்.
அந்த வகையில், குறிப்பிட்ட சில குணங்கள் உள்ளவர்களுடன் பயமில்லாமல் நண்பர்களாக பழகலாம். அப்படியானவர்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நண்பர்களாக இருக்க தகுதியில்லாதவர்கள்
1. ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் முன்னர் தியாகம் செய்யும் குணம் உள்ளதா? என்பதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சாணக்கிய நீதியின் படி, தன்னலமற்ற தன்மையை வெளிப்படுத்துபவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு தகுதியானவர்கள் என கூறப்படுகிறது.
2. நல்ல குணம் கொண்ட நபர்களுடன் நட்பு வைத்திருக்கும் போது அவர்கள் மீது பகை இல்லாவிட்டால் அவர்களை கண்மூடித்தனமாக நம்பலாம். அத்துடன் நம்பிக்கை, ஒழுக்கம், நேர்மை இப்படியான குணங்கள் இருந்தால் அவர்கள் கண்மூடித்தனமாக நம்பலாம். ஏனெனின் அவர்களால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.
3. கோபம், சுயநலம், பெருமை, சோம்பல் மற்றும் வஞ்சகம் உள்ளிட்ட குணங்கள் இருப்பவர்களிடம் மறந்தும் நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள். மேற்குறிப்பிட்ட குணங்கள் இல்லாதவர்களிடம் எதை வேண்டும் என்றாலும் பகிரலாம்.
4. ஒருவரின் குணாதிசயங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கவும். ஏனெனில் அவர்கள் ஏதாவது ஒரு நிலையில் உங்கள் நம்பிக்கைக்கு துரோகம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. நம்பிக்கையான உறவுகளிடம் நட்பு வைத்து கொண்டால் அது ஆயுள் வரை வரும்.
5. ஈகோ என்பது எப்படிப்பட்ட வலுவான உறவிலும் விரிசலை ஏற்படுத்தும் என சாணக்கியர் கூறுகிறார். உறவுகள் எந்த சமயத்தில் வேண்டுமென்றாலும் நம்மை வீழ்த்தலாம். சாணக்கிய நீதியின் படி, உங்கள் உறவுகளுக்கு இடையூறு விளைவிக்கும் அளவிற்கு ஒருபோதும் ஈகோவை வளர விடாதீர்கள்.