Loading...
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் திரைக்கு வருவதில் சிக்கல் வெளியானது. இப்படத்தை வெளியிடுபவர்களில் ஒருவரான வேந்தர் மூவிஸ் மதன், பைனான்சியர் போத்ராவிடம் வாங்கிய ரூ.11 கோடி கடனை திருப்பிக் கொடுக்காததால், இப்படத்தை வெளியிட தடை வாங்கியிருந்தார் போத்ரா. இதனால், இந்த படம் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்வாங்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்திற்கு எதிராக போத்ரா தொடர்ந்திருந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரம் காட்டியுள்ளனர். அதன்படி, வருகிற மார்ச் 9-ந் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Loading...
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரித்துள்ளார். சிவபாலன் பிக்சர்ஸ் மற்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை வெளியிடவுள்ளது.
Loading...