வாஸ்து படி வீட்டில் எந்த திசையில் தங்கத்தினை வைத்தால் அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
வாஸ்து
பொதுவாக வீட்டில் ஒரு பொருளை வைக்க வேண்டும் என்றால் அது கட்டாயம் வாஸ்து சாஸ்திரம் பார்த்த பின்பு சரியான திசையை தெரிந்து கொண்டு தான் வைப்பார்கள்.
இது இந்துக்கள் மத்தியில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவதுடன், இதன் மூலம் நேர்மறை ஆற்றல் நிறைந்திருப்பதாகவும் உணர்கின்றனர்.
ஒவ்வொரு பொருட்களும் வாஸ்து சாஸ்திரம் உள்ள நிலையில் தங்கத்திற்கும் உள்ளது உங்களுக்கு தெரியுமா? ஆம் தங்கத்தினை வாஸ்து படி எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் சரியான இடத்தில் தங்கத்தினை வைத்தால் செல்வமும், அதிர்ஷ்டும் கிடைப்பதுடன், பிரச்சனைகளும் நீங்குமாம். தங்கம் வாங்கும் போதும் கவனம் தேவை.
தங்கத்தை எந்த இடத்தில் வைக்கலாம்?
வாஸ்துபடி தங்கத்தினை வீட்டின் தென்மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும். இவ்வாறு வைத்தால் தங்கம் அதிகரிக்கும். ஆனால் வீட்டின் வடமேற்கு திசையில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அதே போன்று தங்கம் இருக்கும் அறையின் நிறமும் மஞ்சள் நிறத்தில் தான் இருக்க வேண்டுமாம். இதனால் குபேரர் செல்வத்தையும், வளத்தையும் பெருக செய்வாராம்.
தங்க நகைகளை வைக்கும் அலமாரியானது வடக்கு நோக்கி கதவு திறந்து இருக்க வேண்டும். வடக்கு திசையானது வீட்டில் பணம் மற்றும் நகைகளை வைப்பதற்கு உகந்ததாக பார்க்கப்படுகின்றது.
மேலும் செல்வம் அதிர்ஷ்டத்தினை ஈர்க்க லாக்கரில் ஒரு கண்ணாடியை வைக்கவும். வீட்டின் லாக்கர் ஒரு போதும் குளியலறை நோக்கி திறந்து இருக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.