பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கியரின் கூற்றின்படி, வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் எப்பவும் இருக்கும். மாறாக தொடர்ந்து சரியான பாதையில் நடப்பவர்களால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும்.
அந்த வகையில், வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டும் என்றால் என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, வாழ்க்கையில் வெற்றியடைய முன்னர் சூழ்நிலைகளை அறிந்து கொண்டு செயற்பட வேண்டும் என கூறப்படுகின்றது. உதாரணமாக பணிச்சூழல், இடம், உங்கள் சக பணியாளர்கள், சக ஊழியர்களின் அணுகுமுறை, வாய்ப்புகள் போன்றவற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் சூழ்நிலைகளை அறியாத ஒரு நபராக வேலையில் தோல்வியடைய வாயப்பு இருக்கிறது.
2. காலத்தின் தேவை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உங்களின் சொந்த விருப்பங்களை ஓரமாக வைத்து விட்டு பொறுமையுடன் பணியைத் தொடர வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். பொறுமை இழந்தால் உங்கள் உழைப்பும் வீணாகிவிடும். அப்போது உங்களின் வெற்றி தூரமாக சென்று விடும்.
3. வாழ்க்கையில் முன்னேற, வேண்டும் என்றால் உங்களுக்குள் என்னென்ன திறமைகள் உள்ளன என்பதனை அடையாளம் கண்டுக் கொள்ள வேண்டும். ஒரு வேலையைச் செய்யும் போது, அதைச் செய்ய முடியுமா? என்பதனை உங்களுக்குள் நினைத்து பார்த்து கொள்ள வேண்டும். இதனை சரியாக கணித்தால் மாத்திரமே வாழ்க்கையில் வெற்றிப் பெற முடியும்.
4. நண்பனையும் எதிரியையும் வேறுப்படுத்தி பார்க்க தெரிந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என சாணக்கியர் கூறுகிறார். சிலர் நண்பர்களாக வேடமணிந்து உங்களை தோற்கடிக்க உங்களை சுற்றிக் கொண்டிருப்பார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் சரியானதொரு நபரை அடையாளம் கண்டுக் கொள்வது அவசியம்.