ஆடம்பர நாயகனாக விளங்கும் சுக்கிரனின் இடமாற்றத்தினால் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசியினரை குறித்து தற்போது பார்க்கலாம்.
நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். ஒருவரின் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்பவர் இவர் தான்.
சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் ஆகும் நிலையில், இவரது இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சுக்கிர பகவான் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சிம்ம ராசியில் சுக்கிர பகவான் பயணம் செய்து வரும் இவர், வரும் ஆகஸ்ட் 25ம் தேதி அன்று கன்னி ராசிக்கு செல்கிறார்.
கன்னி ராசியானது புதன் பகவானின் சொந்த ராசியாகும். வரும் செப்டம்பர் 18ம் தேதி வரை கன்னி ராசியில் பணிக்கும் சுக்கிரனால் ராஜயோகத்தை அடையும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் ஐந்தாவது வீட்டில் இருக்கும் சுக்கிரன் பயணம் செய்யும் நிலையில், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதுடன், நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றமும் இருக்கும்.
அனைத்து துறையிலும் வெற்றி கிடைப்பதுடன், பாராட்டு மற்றும் பதவி உயர்வும் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல செய்தியும், மாணவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள்.
துலாம்
துலாம் ராசியியைப் பொறுத்தவரையில் பன்னிரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணிக்கும் நிலையில், அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்குமாம். நல்ல பொருள் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதுடன், நீண்ட நாள் ஆசையும் நிறைவேறும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், திருமண வாழ்க்கையில் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும், மாணவர்கள் கல்லிவியில் சிறந்து விளங்குவார்கள்.
மகரம்
மகர ராசியில் சுக்கிரன் ஒன்பதாவது வீட்டில் பயணிக்கும் நிலையில், நீண்ட நாள் ஆசை அனைத்தும் நிறைவேறும். எதிர்காலம் குறித்த முடிவுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தருவதுடன், நல்ல யோகமும் கிடைக்கும்.
புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உள்ள நிலையில், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதையை பெறுவீர்கள், எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றியே கிடைக்கும்.