ஜோதிட சாஸ்திரத்தின் பார்வையில் கிரகங்களின் இடமாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
கிரகங்களின் அதிபதியான சூரியனின் இடமாற்றம் மிகவும் முக்கியமாகதாக பார்க்கப்படுகின்றது. சூரியன் ஒருவரின் ராசியில் அமர்வது மிகவும் மங்களகரமாக பலன்களை கொடுக்கக்கூடியது. குறிப்பாக தலைமைத்துவத்தில் இருப்பவர்களுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொக்கும்.
அந்தவகையில் எதிர்வரும் ஆகஸ்ட் 16ஆம் திகதி இரவு 07:32 மணிக்கு சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய போகின்றார். சிம்ம ராசியில் சூரியன் மிகவும் வலுவாக இருப்பதால் இயல்பாகவே சிம்ம ராசியினருக்கு பல்வேறு வகையிலும் சாதக பலன்கள் கிடைக்ககூடியதாக இருக்கும்.
மேலும் குறிப்பிட்ட சில ராசியினருக்கு சிம்ம ராசியில் சூரிய பகவான் இடமாற்றத்தால் ஏற்படும் தாக்கம் மிகவும் வலுவாக இருக்கப்போகின்றது. அவ்வாறு சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
சிம்ம ராசியில் சூரிய பகவான் இடமாற்றம் அடைவதால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் வாழ்வில் முக்கியமாகதாக அமையும்.
தொழில் ரீதியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். வணிக நடவடிக்கைகளில் ஈடுப்படுவோருக்கு இந்த மாற்றம் லாபத்தை வாரிக்குவிக்கப்போகின்றது.
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் குழந்தைகள் விடயத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வந்துசேரும். இதனால் பெருமையடைவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் வாழ்வில் இவர்களின் முன்னேற்றத்துக்கான கதவுகளை திறந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
பணியிடத்தில் நல்ல பெயரும் புகழும் அதிகரிக்கும். இந்த ராசியினரின் செல்வம் மற்றும் பேச்சின் வீட்டில் சூரியன் அமர்வதால் பொன்னும் பொருளும் உங்களை தேடி வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
திருமணவாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வீடு தேடி வரும்.புதிய வீடு வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கைகூடி வரும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.
தனுசு
சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதானது தனுசு ராசியினருக்கு மாபெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. இந்த காலகட்டத்தில் இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.
தொழில் ரீயிதில் நல்ல முன்னனேற்றத்தை எதிர்ப்பார்கலாம். புதிய தொழிலை ஆரம்பிக்க காத்திருப்போருகக்கு இது சிறந்த நேரமாக அமையும். பணவரவு மிகுந்த திருப்தியை கொடுக்கும்.
வேலை தேடுபவராக இருந்தால் இவ்வளவு காலம் காத்திருந்தமைக்கு ஏற்றவாறு மனதிற்கு பிடித்த தொழில் வாய்ப்பு அமையும். எதிர்பாராத வகையில் ஒரு அசுர வளர்ச்சியை இந்த மாற்றம் கொடுக்கப்போகின்றது.