சிலர் பார்ப்பதற்கு நல்ல மனிதர்கள் போல் காட்சிக் கொடுப்பார்கள். ஆனால் அவர்களிடம் பழகிப் பார்க்கும் போது தான் நிஜ வாழ்க்கையில் வாழும் சைக்கோ என்பது புரிய வரும்.
இதனை மனநோய் அல்லது சைக்கோத்தனம் என்று உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
மனநோயாளி அல்லது சைக்கோ எனக் கூறும் போது அவர்கள் எம்மை கொலைச் செய்வார்கள் என்று அர்த்தம் ஆகாது. மாறாக அவர்களை ஒரு சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, பேசும்போது அளவிற்கு அதிகமாக கோபம் கொள்வார்கள். அடிக்கடி மனநிலை மாற்றம் ஏற்படும். மனசாட்சி இல்லாமல் வார்த்தைகளால் காயப்படுத்துவார்கள் போன்றவைகளை கூறலாம்.
ஜோதிடத்தின்படி, சைக்கோக்கள் ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்களாக தான் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், சைக்கோத்தனமாக நடந்துக் கொள்ளும் ராசியினர் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. விருச்சிகம்
இந்த ராசிக்காரர்கள் தீவிர உணர்ச்சிகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே ஒரு மர்மம் உடையவர்களாக இருப்பார்கள்.
தீவிர புத்திசாலித்தனம் மற்றும் வலுவான மன உறுதிக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவ்வளவு நல்லது இருந்தாலும் சில சமயங்களில் விருச்சிக ராசிக்காரரர்களை கையாள்வது கடினமாக இருக்கலாம்.
அவர்களின் உண்மையான உணர்வை மறந்து என்ன செய்கின்றார்கள் என்பதனை மறந்து செயற்பட ஆரம்பிப்பார்கள்.
2. மிதுனம்
மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அனைவரிடமும் இணக்கமானவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்கள் இலகுவாக நம்புவார்கள். இதனால் பாரிய ஏமாற்றங்களை சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
மிதுன ராசிக்காரர்கள் சீரற்ற நடத்தையை வெளிப்படுத்துவார்கள். இதனை காரணமாக வைத்து உறவில் மாற்றங்கள் ஏற்படலாம்.
3. மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அசைக்க முடியாத உறுதி, நம்பிக்கை மற்றும் லட்சியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் வாழ்க்கை நடப்பவைகள் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருப்பார்கள்.
இவர்கள் பார்ப்பதற்கு சைக்கோத்தனமாக நடந்து கொள்ளவில்லை என்றாலும், அவர்களின் மனநிலையில் அந்த குணம் ஆதிக்கம் செலுத்தும்.
சில சமயங்களில் மேஷ ராசியில் பிறந்தவர்கள் இரக்கமில்லாதவர்களாக நடந்து கொள்ள வழிவகுக்கலாம்.
இந்த குணத்தால் உடனிருப்பவர்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.