எதிரான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்கள் இணையத்தளங்கள் வழியாக அரசாங்கம் குறித்து மேற்கொள்ளும் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என வெளிநாடுகளில் வாழும் இலங்கை சமூகத்தை கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் அந்நாட்டில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தோனேசிய அரசாங்கம் இலங்கை தலைவர் ஒருவருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றுக்கான அழைப்பை விடுத்தது இதுவே முதல் முறை.
இந்த அழைப்பை விடுத்தமைக்காக இந்தோனேசிய ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
சர்வதேச ரீதியில் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை மிகப் பெரிய வரவேற்பும் கௌரவமும் கிடைத்தது.
நான் ஜனாதிபதியாக பதவியேற்று முதல் வருடத்தில் இலங்கையின் எந்த அரச தலைவருக்கும் கிடைக்காத வகையில் உத்தியோகபூர்வ விஜயங்களுக்கான அழைப்புகள் கிடைத்தன.
இலங்கைக்கு சர்வதேச சமூகம் வழங்கும் மரியாதையை இதன் மூலம் காணமுடிகிறது.
ஜனநாயகத்தை எடுத்துக்கொண்டால், நாங்கள் உயரிய ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பியுள்ளோம். நாட்டில் சுதந்திரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
எனினும் இணையத்தளங்கள் வழியாக இலங்கை தொடர்பாக தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் அரசியல் எதிரிகள் இருக்கின்றனர்.
அரசாங்கத்தை அதிருப்திக்கு உள்ளாக்குவதே அவர்களின் நோக்கம். முகநூல் உட்பட சமூக வலைத்தளங்கள் ஊடாகவே இந்த பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் ஸ்திரமாக இருக்கின்றது. இந்த பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம். உலகில் உள்ள சகல நட்பு நாடுகளும் எமக்கு உதவி செய்கின்றன. சர்வதேச நிதி அமைப்புகளும் எமக்கு உதவுகின்றன.
கடந்த மாதங்களில் இலங்கையில் வறட்சி ஏற்பட்டதை நீங்கள் அறிவீர்கள். உணவு உற்பத்தி 40 வீதத்தினால் குறைந்து போனது.
அந்த சந்தர்ப்பத்தில் பணத்திற்கு அரிசியை வழங்குமாறு நாங்கள் நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்தோம். இந்தோனேசிய ஜனாதிபதி 5 ஆயிரம் மெற்றி டன் அரிசியை அன்பளிப்பாக வழங்கினார்.
இந்தியா, பாகிஸ்தான் உட்பட சகல நாடுகளும் உதவி செய்கின்றன எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.