ஜோதிடம் ஒரு நபரின் ஆளுமை, நடத்தை மற்றும் அனைத்தையும் துல்லியமாக வரையறுக்கிறது. அவர்களின் ராசியின் படி, அவர்கள் எந்த மாதிரியான ஆளுமை கொண்டவர்கள் என்று சொல்லலாம்.
ராசி என்பது ஒவ்வொருவரின் குணநலங்களையும் சிறப்பாக எடுத்துக்காட்டக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் ஒவவொருவரும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொண்டுள்ளனர். இந்த 12 ராசிகளுக்கும் நவக்கிரகங்களின் அடிப்படையில் தான் அவர்களின் தாக்கம் கணிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் சில ராசிகளில் பிறந்தவர்கள் கிரகங்களின் தாக்கத்ததால் மிகவும் சந்தேகத்திற்குரியவர்களாக இருப்பார்களாம். அந்த வகையில் தங்களது துணையை நம்பாத ராசிக்காரரர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
இந்த ராசிக்காரர்களை கவனித்து பாருங்கள் இவர்கள் மிகவும் எளிதாக கோபப்படுவார்கள். தங்கள் துணையின் ஒரு சிறிய சிறிய விஷயத்தையும் கவனித்துக்கொண்டு கேளிவிக்கு மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு இருக்கும் வேலையை விட துணையின் வேலையில் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது. அவர்களின் சந்தேகத்துக்கு இடமான போக்குகள் காரணமாக இவர்களின் உறவுகள் பெரும்பாலும் சேதமடைகின்றன.
தனுசு
இவர்கள் தங்கள் துணையின் மீது கழுகு பார்வை கொண்டவர்கள். தங்கள் துணை இவர்களிடம் எதையும் மறைக்கவில்லை என்றாலும் இவர்கள் அவர்களின் நடத்தையில் சந்தேகித்துக்கொண்டே இருப்பார்கள். என்னதான் இருந்தாலும் இவர்களுகக்கு எளிமையான வாழ்க்கை என்றால் மிகவும் பிடிக்கும். நாள் முழுக்க துணையின் நினைவை கொண்டவர்கள் இவர்கள்.
ரிஷபம்
இவர்களிடம் வலுவாக காணப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் அது துணையை சந்தேகிப்பதுதான். எந்த விஷயத்தைப் பற்றியும் மிக ஆழமாகச் சிந்திக்கிறார்கள். அவர்கள் தங்கள் துணை இல்லாத நிலையில் அவர்களைப் பற்றி சிந்திக்கிறார்கள். இதன் காரணத்தினால் தான் இவர்கள் குடும்ப வாழ்க்கையில் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர்.