சனிபகவான் என்றால் பயந்து ஒதுங்குவார்கள். சனிபகவான் ஒரு ராசியில் குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகள் முதல் 3 ஆண்டு காலங்கள் சஞ்சரிப்பதால் நன்மையாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி அதன் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது.
சனி என்பது நேர்மை, உண்மை, கடின உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கும் கிரகம். ஊழியர்களை ஏமாற்றக் கூடாது. ஒரு விஷயத்தை செய்து முடிக்க வேண்டும் என்று உறுதி மேற்கொண்டு அதை நிறைவேற்றுவதை நோக்கி செயல்பட வேண்டும்.
இந்த நிலையில் 30 ஜூன் 2024 முதல், சனி கிரகம் கும்பத்தில் பிற்போக்கு நிலையில் உள்ளது. நவம்பர் 15 வரை சுமார் 139 நாட்கள் அது தலைகீழாகவே நகரும்.
இந்த சனியின் தலைகீழ் இயக்கம் சில ராசிகளுக்கு இன்பத்தை கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
சனியின் இந்த பிற்போக்கு இயக்கத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது நிலைத்து நிற்கும். பழைய முதலீட்டால் இதுவரை எந்தவித வருமானமும் இல்லாமல் இருந்தது இப்போது நன்றாக பணம் கிடைக்கும்.
நீங்கள் வேலை செய்யும் நபராக இருந்தால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பதவியில் சில தடைகள் இருந்தாலும் அது தற்போது தடைகள் இல்லாமல் போகும்.
வாகனம் நிலம் போன்ற சொத்துக்கள் சொந்தமாக வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஏதாவது பிழை இருந்தால் அது தற்போது இல்லாமல் போகும் நல்ல முறையில் வருமானம் வரும்.
தனுசு
இந்த தலைகீழ் மாற்றத்தால் இந்த மாதத்தில் இருந்து இன்னும் ஐந்து மாதங்களுக்கு நீங்கள் செல்வத்தில் குளிப்பீர்கள். எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும் வெற்றி தான் எனவே உங்களுக்கு எவ்விதத்திலும் கஷ்டம் இருக்காது.
முழுக்க முழுக்க இந்த கால கட்டத்தில் உங்களுக்கு எல்லாவற்றிலும் ஆதாயம் கிடைக்கும். சமூகத்தில் இதுவரை இருந்ததை விட அதிக மரியாதை கிடைக்கும். எதிரிகள் உங்களுக்கு பயப்படுவார்கள். அந்த அளவிற்கு நீங்கள் பலசாலியாக இருப்பீர்கள்.
கும்பம்
உங்களுக்கு இந்த சனிபகவானின் அருள் 139 நாட்களுக்கு அப்படியே இருக்கப்போகிறது. இந்த கால கட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு பணியிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவீர்கள்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சனிப்பெயர்ச்சியின் போது நீங்கள் எதை செய்தாலும் வெற்றி கிடைக்கும் என்பதால் நீங்கள் பயப்படாமல் எதையும் ஆரம்பிக்கலாம்.