Loading...
பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, வீணை கலைஞரும் கூட. இவர் பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் இவரே வீணை வாசிப்பதை வழக்கமாக கொண்டவர். பிறவியிலேயே கண்பார்வையற்ற வைக்கம் விஜயலட்சுமிக்கு சமீபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. ஆனால், ஒருசில காரணங்களால் வைக்கம் விஜயலட்சுமியே அந்த திருமணத்தை நிறுத்தினார்.
Loading...
அந்த சோகமும், வருத்தமும் எதுவும் தன்னை பாதித்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும்வகையில், கின்னஸ் சாதனையொன்றை நிகழ்த்தி காட்டியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி. கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாமல் காயத்ரி வீணையால் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதில், மலையாளம், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவர் பாடிய பாடல்களும், 12 கீர்த்தனைகளும் அடங்கும். இவருடைய இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், வைக்கம் விஜயலட்சுமியோ, என்னுடைய குரு, பெற்றோர்கள், நலம் விரும்பிகளின் கனவை நனவாக்க முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார்.
Loading...