Loading...
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.
இலங்கை கடற்படை பேச்சாளர் லெப்டினண்ட் கொமான்டர் சமிந்த வலகுலுகே இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
Loading...
தமிழகத்தின் இராமேஸ்வர மாவட்டத்தின் தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த தாக்குதலையடுத்து, சில மீனவர்கள் காயங்கள் எதுவும் இன்றி அதிகாலை இராமேஸ்வரம் சென்றடைந்ததாக மீனவ சங்கத் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...