ஒருவரை ஒருவர் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவருக்கு பார்த்திபன்(24) என்ற மகன் உள்ளார். இவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவருக்கு கோகுல் என்ற மகனும், பூஜா (20) என்ற மகளும் உள்ளனர். பூஜா சீனாவில் மருத்துவருக்கு படித்து வருவதாக கூறப்படுகிறது.
பூஜாவின் அண்ணன் கோகுலுக்கு பார்த்திபன் நண்பர் என்று கூறப்படுகிறது. இதனால் பார்த்திபன் அடிக்கடி கோகுல் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
அப்போது, பூஜாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சீனாவில் இருந்தபடியே செல்போன் மூலம் பார்திபனை தொடர்பு கொண்டுள்ளார் பூஜா.
இதனால் அவர்களுக்கு இடையேயான காதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துள்ள பூஜாவுக்கும் பார்த்திபனுக்கும் பெங்களூரில் வைத்து ரகசிய திருமணம் நடந்துள்ளது.
இதன் பின்னர் இருவரும் சென்னை வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து உயிருக்கு பயந்து அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் படி காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.