எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது.
ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ரேடிக்ஸ் எண் அல்லது மூல எண் என்றால் என்ன?
ஒரு நபரின் பிறந்த தேதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்” என அழைக்கப்படுகின்றது. அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும்.
உதாரணமாக 5, 14, 23ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஐந்து என்ற ரேடிக்ஸ் எண் இருக்கும். ரேடிக்ஸ் 5-ன் அதிபதி ‘’புதன் கிரகம்” என நம்பப்படுகிறது.
இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும், பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
இதனால் எண் 5 பிறந்தவர்களின் காதல் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இது தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. 5 ஆம் திகதி பிறந்தவர்கள்
2 மாதங்களில் 5 ஆம் திகதி பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண் 5 ஆக இருக்கும். இந்த ரேடிக்ஸ் எண் கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்கள் வேலை செய்யும் துறையில் சிறந்து விளங்குவார்கள். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் நடைமுறையானவர்களாக இருப்பார்கள். இதனால் காதலில் தோல்வி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. 14 ஆம் திகதி பிறந்தவர்கள்
14 ஆம் திகதி பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண் 5 ஆக இருக்கும். இவர்கள் வணிகத்தில் வெற்றி பெறுவார்கள். அவர்களின் கனவுகள் அனைத்து நினவாகும். காதல் வாழ்க்கை எனப் பார்க்கும் போது ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இவர்கள் நீண்ட காலத்திற்கு பின்னர் உண்மையான அன்பை உணர்வார்கள்.
3. 23 ஆம் திகதி பிறந்தவர்கள்
எந்த மாதத்திலும் 23ஆம் தேதி பிறந்தவர்களுக்கு ரேடிக்ஸ் எண் 5 ஆக தான் இருக்கும். இவர்கள் கவர்ச்சியான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல வாழ்க்கைத்துணை கிடைப்பார் என்ற நம்பிக்கையில் எப்போதும் இருக்கமாட்டார்கள். சரியான தேர்வுகளை இலகுவாக செய்வார்கள். காதல் வாழ்க்கையில் நிலையற்ற தன்மை இருக்கும். காதலை தேடிக் கொண்டிருப்பார்கள் ஆனால் உண்மையான அன்பு கண்ணுக்கு தெரியாமலே போய் விடும்.