நாம் செய்யும் பாவ வினைகளுக்கு ஏற்ற வகையில் நமக்கு நன்மை தீமைகைளை தரக்கூடியவர் தான் கனி பகவான். இவா இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
சனி பகவான் இவர் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் சனி திசை என்பது முற்றிலும் மாறுபட்டது.சனி திசை மொத்தம் 19 ஆண்டுகள் நடைபெறும்.
கர்ம காரகன், தொழில் காரகன் ஆன சனி பகவானின் திசையானது ஒருவர் உழைக்க தகுதி பெற்ற காலத்தில் சனி திசை வந்தால் மேன்மையை தரும். குழந்தை பருவத்தில் சனி திசை வந்தால் பெரிய பலன்களைத் தராது.
பூசம், அனுசம், உத்தரட்டாதி நட்சத்திரக்கார்களுக்கு முதல் திசையே சனி திசை என்பதால் இந்த நட்சத்திரங்களுக்கு சனி திசையால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் குறைவாகவே இருக்கும். இந்த நட்சத்திரங்கள் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் வரும்.
சனி திசையின் நல்ல யோகம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஸீவன மற்றும் லாபஸ்தான யோகம் கிடைக்கும். ஜீவனத்தை நடத்தக் கூடிய அனைத்துவித வேலையையும் குறிக்கும். பணியாற்றுதல்,லாபம் பெறுதல், உயர்பதவி, அரச கெளரவம், பட்டம், பதவி பெறுவதை குறிப்பதாகும்.
சனி திசையால் இந்த யோகம் கிட்டும். ரிஷபம் லக்னத்திற்கு பாக்கிய மற்றும் தசம கேந்திர அதிபதியாகவும், தர்ம கர்மாதிபதியாகவும் இருப்பார். மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும் அஷ்டமாதிபதியாகவும், பாக்கியாதிபதியாகவும் இருப்பார்.
கடக லக்கணத்தில் பிறந்தவர்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும் சப்தமாதிபதியாக இருப்பார். சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு ருண, ரோணாதிபதியாகவும், சப்தமாதிபதியாகவும் இருப்பார். நன்மையாக நினைப்பவை அனைத்தும் நிறைவேறும்.
கன்னி ராசியின் லக்கணத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகவும், ரோகாதிபதியாகவும் இருப்பார். இதனால் பழைய பிரச்சனைகள் எல்லாம் முடிவிற்கு வரும். துலாம் லக்கணத்தில் பிறந்தவர்களுக்கு முழு ராஜயோகாதிபதியாகவும், பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் இருப்பார்.
இதனால் உங்களுக்கு வெற்றி பாதைகளுக்கு வழி வகுக்கும். தனுசு லக்கணத்தில் பிறந்தவர்களுக்கு தனாதிபதியாகவும், தைரிய வீரியாதிபதியாகவும் இருப்பார். இதனால் இவர்கள் எந்த வேலையாக இருந்தாலும் துணிச்சலாக செய்வார்கள். வெற்றியும் பெறுவார்கள்.
மகரம் லக்னத்தில் பிறந்தவர்கள் லக்னாதிபதியாகவும், தனாதிபதியாகவும் இருப்பார். இதனால் இவர்கள் தன்னுடைய வேலையை எப்போதும் சுயமாக சிந்தித்து நடப்பதால் வெற்றி பெறுவார்கள். மீனம் லக்னத்திற்கு லாபாதிபதியாகவும், விரையாதிபதியாகவும் இருப்பார்.
சனி பகவானின் காரகத்துவம்
சனியின் காரகத்துவம் என்பது தன்னலம் கருதாமல் தொடர்ந்து உழைப்பது சனி பகவானின் காரகத்துவத்தில் ஒன்றாகும்.
அந்த வகையில் சனியின் காரகத்துவங்களாக கடும் உழைப்பு, அழுக்கு படிதல், பூமிக்கு கீழ் கிடைக்கும் கனிமங்கள், கழிவுப்பொருட்கள், இரும்பு, ரசாயன பொருட்கள் உள்ளிட்டவை சனி பகவானின் காரகத்துவம் பெற்று விளங்குகின்றது.
மேஷத்திற்கு கலவையான பலன் கிடைக்கும். ரிஷபத்திற்கு நன்மை மட்டுமே கிடைக்கும். மிதுனத்திற்கு 75 சதவீத பலனை கொடுப்பார். கடகத்திற்கு நல்ல பலன் இல்லை ஆனால் திருமணம், வாழ்கை துணை, கூட்டாளி, பங்காளி ஆகியவற்றிற்கு சனி ஆதிபதியம் பெற்று உள்ளார்.
சிம்மத்திற்கு நோயில் இருந்து விடுவிப்பார். கன்னின்கு முக்கால் பலனை தருவார். விருட்சகத்திற்கு கலப்பு பலனே கிடைக்கும். தனுசுக்கு வாழ்க்கைக்கு தேவையான பலனை தருவார். மகரம் மற்றும் கும்பத்திற்கு தன் வீடு என்பதால் நன்மையும் தருவார். பிற வீடுகளுக்கு சனி பகவான் சேரும் கிரகங்களை பொறுத்தே இது தீர்மானிக்கப்படும்.